அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 'செக்'. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2015

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 'செக்'.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்ட, ஆசிரியர்மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பணிநியமன அரசாணை விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 8,200 அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இப்பள்ளிகளுக்கு, மானியம், சிறப்பு கட்டணம், ஆசிரியர்கள், அலுவலர்கள் சம்பளம் என, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் மாநில அரசு நிதியை ஒதுக்குகிறது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன.


அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2013ம் ஆண்டு அக்., 10ம் தேதி நிலவரப்படி, பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், எந்தெந்த அரசாணையின் படி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்; பணிநியமன சார்ந்தஅரசாணை குறித்த தெளிவான விபரங்களை உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி