TNPSC : குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

TNPSC : குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு.

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவுசெய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக் கட்டணங்கள் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான ரசீதின் (Challan) நகலுடன் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 13-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி