பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பதவி, சம்பள உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2015

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பதவி, சம்பள உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக தவிப்பு

அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு, பதவி உயர்வு இல்லாமல் தவிக்கின்றனர். இதனால், ஒவ்வொருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் கூறுகின்றனர்.


தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல் படுகின்றன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 2006 ஜூலை முதல் சம்பள உயர்வு பெற்று வருகின்றனர்.பொதுவாக விரிவுரையாளர், உதவி பேராசிரியர் போன்ற பணியில் உள்ளவர்கள்குறிப்பிட்ட ஆண்டு பணிக்குப் பிறகு அடுத்த நிலை ஊதிய உயர்வுக்கு தகுதி பெறுவார்கள். உதாரணத்துக்கு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.15,600 அடிப்படை சம்பளம், ரூ.5,400 தர ஊதியத்தில் விரிவுரையாளராக சேருவோருக்கு 5 ஆண்டு கழித்து தர ஊதியம் ரூ.6,000 ஆக உயரும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்குதர ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக அதிகரிக்கும்.இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி முன்னேற்ற திட்டம் (Career Advancement Scheme) என்ற புதிய திட்டத்தை ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கு பல விதிமுறைகள் நிர்ணயிக்கப் பட்டன. எம்இ, பிஎச்டி மாணவர் களுக்கு வழிகாட்டியாக இருப்பது, சர்வதேச மாநாடுகளில் பங்கேற் பது, சர்வதேச இதழ்களில் கட்டுரை வெளியிடுவது போன்ற விதிமுறை கள் வரையறுக்கப்பட்டன.பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஊதிய நிலை, பதவி உயர்வுக்கு ஏஐசிடிஇ விதிமுறைகளை பரிந்துரைக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், ஏஐசிடிஇ விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவதற்காக தர நிர்ணயம்,திறன் மேம்பாடு, ஆராய்ச்சி பணி ஆய்வு தொடர்பாக எந்த உத்தரவையும் அரசுபிறப்பிக்கவில்லை.இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். பலருக்கு ஊதிய உயர்வு (அடுத்த தர ஊதியம் மற்றும் அடுத்தநிலை சம்பளம்) கிடைக்கவில்லை.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் பி.தினகரன் கூறியதாவது:டிப்ளமோ படிப்பவர்களுக்கு பாடம் நடத்தும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் எம்இ, பிஎச்டி மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டியாக இருக்க முடியும்? இது சாத்தியம் இல்லை. ஏஐசிடிஇ விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாணை ஏதும் வெளியிடப்படாததால் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெற முடியாமல் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர்.ஒவ்வொருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ1.5 லட்சம் என்ற அளவில் ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒருசிலரால் அடுத்த சம்பள நிலைக்கு செல்ல முடியவில்லை. 7-வது ஊதியக்குழு வர உள்ள நிலையில், இன்னும் 6-வது ஊதியக்குழு நிர்ணயித்த ஊதிய உயர்வைக்கூட ஆசிரியர்களால் பெற முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி