கூட்டத்துக்கு, தமிழக ஆசிரியர்கூட்டணி மாநில பொதுச்செயலாளர் கோ. முருகேசன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் பெனின் தேவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் என்.ரெங்கராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தலைவர் பெ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அக்டோபர் 8-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திய பின்பும், தமிழக அரசு, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, நவம்பர் 15-ம் தேதி மாவட்ட அளவில் இணைப்பு சங்க கூட்டமும், டிசம்பர் 5, 6-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் மறியல் போராட்ட ஆயத்த மாநாடும், டிசம்பர் 12, 13-ல் (சனி,ஞாயிறு) அனைத்து வட்டாரங்களிலும், மறியல் போராட்ட ஆயத்த மாநாடும், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 28, 29, 30-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டமும் நடத்தப்படும். இதில் 2 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள் என்று ஜேக்டோ உயர்நிலைக்குழு உறுப்பினரும்,தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள் சங்க மாநிலத்தலைவருமான சாமி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
Sunday, 1 November 2015
ReplyDeleteஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் இ.நி.ஆசிரியர் இனமே...! இனியாவது விழித்துக் கொள்....!
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இ.நி.ஆசிரியர் இனமே...!
இனியாவது விழித்துக் கொள்....!
����2009 முதல் இ.நி.ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வாங்கித் தருகிறேன் வாங்க...என்று அழைத்து சென்று தனக்கு வேண்டியதை பெற்றார்கள். .
����வட்டார, மாவட்ட, மாநில அளவிலான நோட்டீஸ் விநியோகம், ஆர்ப்பாட்டம், கோரிக்கை முழக்கம், பெருந்திரள் முறையீடு, உண்ணாவிரதம் என பலவித ஏமாற்றுவேலை செய்தார்கள்.
����எள்ளளவும் எள் முனையளவும் குறையாத ஊதியத்தை பெற்றுத்தருவோம் என்று சூலுரைத்து மஞ்சள் துண்டு போட்டு மெளனமானார்கள்..
����ஆட்சி மாற்றம் கண்டவுடன் ஆசிரியர்களுக்கு அனைத்தையும் அள்ளித் தருகிறேன் என்றவுடன் மொத்த ஓட்டையும் அள்ளித் தர வைத்தார்கள் ..
����ஓய்வூதியம் உனக்குண்டு மாற்றி தருகிறேன் என்று மார் தட்டிய மகராசியும் வாய்த்திறக்கல...
����எஸ்மா , டெஸ்மா ஏற்கெனவே கண்டதால அடக்கி வாசிச்சாங்க..
����இ.நி. ஆசிரியர்களுக்கு ஒண்ணும் செய்யல ஒருத்தங்கிட்டயும் சந்தா வாங்க முடியலனதும் முட்டி மோதி மீண்டும் 7 சங்கம் கூடினாங்க...
����தமிழகத்தில் நாம் தான் பெரியாளு எவனையும் சேர்க்க மாட்டோம் னு மார்தட்டுனாங்க...
����எல்லோரும் வரணுமுனு 15 கோரிக்கை வச்சாங்க .. களத்துக்கு பெருமளவு வந்ததேன்னவோ வஞ்சிக்கப்பட்ட இ.நிஆ.இனம் மட்டும்தான் . ..
����அக்டோபர் 8 உங்கள் பேச்சுக் கேட்டு ஒருநாள் ஊதியம் இழந்ததுதான் மிச்சம். ..
����அடுத்த கட்டம் வெற்றி பயணம் என்று வெட்டியா வீராவேஷமா பேட்டி கொடுத்தாங்க...
����இப்போ மீண்டும் முதல இருந்து ஆரம்பிக்கும் மர்மம் என்ன...?
����என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம். .. இப்படியே பொழுதுபோக்கி 7 வது ஊதியக்குழுவிலும் எங்களை அடகுவைத்து நீங்க பலனடைய திட்டமா?
����போதுமடா சாமி...நீங்களும் உங்க போராட்டமும். ...
��இ.நி.ஆசிரியர் இனமே
இனிமேலும் இளிச்சவாயனாய் இருக்காதே..
��உனக்கான போராட்டம் எது...
உண்மையான போராட்டம் எது...
சிந்தனை செய்.....
��விதி என வெம்பிவிடாதே...
"விதியை மதியால் வெல்லலாம். ..."
��புறப்படு புயலென...
புதுயுகம் படைப்போம்....
சரித்திரத்தில் சாதனை
கொடி நாட்டுவோம்...
2800 Grade Pay ஆல் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களே மாவட்ட அளவில் நடைபெற உள்ள போராட்டத்தின்போது தனியாக ஒன்று சேருங்கள், முதலில் மாவட்ட தலைநகரிலேயே JACTO நிர்வாகிகளை கண்டியுங்கள். இனியும் அமைதிகாக்க வேண்டாம், பொங்கி எழுங்கள்.... JACTO நிர்வாகிகள் தொடர் வேலைநிறுத்தம் செய்யாமல் ஏமாற்றியதற்கு....
ReplyDeleteஒன்றுபடுவோம் வெல்வோம்....
நமக்கு ரோஷம் உண்டு என்பதை உணர்த்துவோம்....
சங்கங்களை வளர்ப்போர்களே ஆசிரியர்களை என்று வளர்ப்பீர்கள்...
துரோகிகளே...!
சங்கத்தின் பதவிக்காக இடைநிலை ஆசிரியர்களை நடுத்தெருவிற்கு வரவைக்கும் சுயநல துரோகிகளே...!
This comment has been removed by the author.
ReplyDeleteஎன் இன சகோக்களே
ReplyDeleteஜாக்டோ வின் போராட்ட களம் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது
இவர்கள் இப்படிப்பட்ட கேவலமான முடிவு எடுக்க காரணம்
அரசின் மீது உள்ள பயமா? ??
ஊதியம் பெற கூடாது என்ற எண்ணமா ??
அல்லது
உயர் கல்வி சங்கங்களின் கூட்டமைப்பின் நிபந்தனை யா? ??
போராட்டம் நீர்த்துப் போக செய்யும் சதியா? ??
ஒருவேளை அரசிடம் இருந்து பணப் பரிமாற்றம் நடந்து இருக்குமோ ???
சில இடங்களில் நாங்கள் அனுபவத்தை வைத்து முடிவு எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் கள்,
நேற்றைய அறிக்கையில் அப்படி எதுவும் தெரியவில்லை.
இந்த முறை ஊதிய உயர்வு வாங்கி தரவில்லை என்றால் சங்க நிர்வாகிகளை தைரியம் அற்றவர்கள் என்று தான் கூற வேண்டும்.
பேருக்கு நடத்துவது இல்லை சங்கம் போர் குணம் கொண்டு நடத்துவது சங்கம்.
இடைநிலை ஆசிரியர்களே இனி இவர்களை நம்ப வேண்டாம்.
கற்பிப்போம் நாம் பாடம் இவர்களுக்கு
This comment has been removed by the author.
ReplyDeleteமறியல் வேண்டாம்
ReplyDeleteஜாக்டோவின் முடிவுக்கு இநிஆ எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது மீண்டும் ஜாக்டோ கூடி முடிவை பரிசீலனை செய்யவேண்டும்.
அரசு ஒரு நாள் வேலை நிறுத்தத்தைப் பார்த்து இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் , தற்போது ஜேக்டோ வின் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பைக் கேட்டவுடன் தன் முடிவை உடனே மாற்றியிருக்கும். இவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வருகிறார்கள். மிகவும் நல்லது என்று அரசு நினைக்கும் .ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரி யர்களும் தங்கள் கூட்டணி தலைமையிடம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய நேரம் இது.போராட்டத்தை ஜேக்டோ உடனே மாற்றா விட்டால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஒட்டு மொத்தமாக தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியிலிருந்து வெளியேறி இடைநிலை ஆசிரியர் களுக்கென பாடு படும் அமைப்பில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்.
ReplyDeleteஆசிரிய பேரியக்கங்களே...
ReplyDeleteநாங்கள் (இடைநிலை ஆசிரியர்கள்) தினக்கூலி செய்பவனை விட குறைவான சம்பளம் பெறுவதால்,
பல தருணங்களில் எங்கள் குடும்பங்களோடு உணவில்லாமல் (உண்ணாவிரதம்) தவித்து வருகிறோம்.
இதை மேடைப் போட்டு எத்தனை முறைதான் அரங்கேற்ற நாடகம் நடத்துவீர்கள்...
எங்கள் இழைப்பு உங்களுக்கு என்ன இனிப்பா?
எங்கள் மனக்கொதிப்பு... உங்களுக்கு குளிர்கால Camp fireஆ???
எங்கள் உரிமையை மீட்டெடுக்கும் ஒரு வலுவான போராட்டம் நடத்துங்கள்...
எங்களை ஏமாற்றும் போராட்டங்களை கைவிடுங்கள்.
இதற்குமேல் எங்களிடம் இழைப்பதற்கு ஒன்றுமில்லை...
Today case enns achu
ReplyDeletePuli kuda varum but case??????
DeleteDear sec grade teacher's, JACTO is aginst sec.Grade teacher's. They are using our streanth only. We will face this issue separtely. Take decession soon. We need seprate leaders.
ReplyDeleteLook at your spelling please. against,strength, separate and decision. படுகேவலமாக உள்ளது.
Delete