கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2015

கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.


இதுகுறித்து மாவட்டஅறிவியல் அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கணித மேதை ராமானுஜரின் பிறந்த தினமான டிசம்பர் 22-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில்கணித நாளை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் கணித திறனறிவுத் தேர்வில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.அடிப்படை கணிதத்தை மையமாகக் கொண்டு கூர்ந்து கவனித்து திறனறிதல்,சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மிக மிக நன்று பிரிவில் ரூ.2,000 மதிப்பிலான பரிசும், மிக நன்று பிரிவில் ரூ.1,000 மதிப்பிலான இரு பரிசுகள், நன்று பிரிவில் ரூ.500 மதிப்பிலான 3 பரிசுகள், சிறப்பு பிரிவில் ரூ.250 மதிப்பில் 20 பரிசுகள் வழங்கப்படுகிறது.காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 18-ஆம் தேதிக்குள் பெயருடன் ரூ.100ஐ செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.


இதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர் 0416- 2253297, 2252297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி