ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2015

ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு

நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் பி.எப். தொகையினை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதில் 2,322 கோடி ரூபாய் கடந்த அக்டோபர் மாதம் வரை பங்குச்சந்தை சார்ந்த இ.டி.எப்.களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


இந்த தொகை சென்செக்ஸ் மற்றும் நிப்டி இ.டி.எப்.களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த முதலீடுகள் குறித்த ஆய்வு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடக்க இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் கூடுதலாக சேரும் தொகையில் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில்முதலீடு செய்ய பி.எப் அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதன்படி நடப்பு நிதி ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் 5,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்ப்பு தெரிவித்தன.முதன்முதலில், ஆகஸ்ட் 6-ம் தேதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.கடந்த இரு நிதி ஆண்டுகளாக பி.எப். தொகை மீதான வட்டி 8.75 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் நவம்பர் 24-ம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி