தொழில்கல்வி உதவித்தொகை பெற நவ.25-க்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

தொழில்கல்வி உதவித்தொகை பெற நவ.25-க்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகை பெற விரும்பும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:


பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை விண்ணப்ப படிவத்திலும், இணையதளம் மூலமாகவும் இரு வழிகளிலும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய முன்னாள் படைவீரர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.எனவே தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஜ்ஜ்ஜ்.க்ங்ள்ஜ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள பிரதமரின்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுவதுமாக பூர்த்தி செய்து நவ.25-ம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மேலும் இணையதள போர்டல் மூலமாக விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.25-ம் தேதிக்கு பின்னர் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் எக்காரணத்தை கொண்டும் பெறப்படமாட்டாது.


பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க www.desw.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ 0424-2263227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி