'குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2015

'குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை

பருவ மழையால், மின்வெட்டு பிரச்னை மற்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, குரூப் - 2ஏ தேர்வுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அரசின் பல துறைகளில், குரூப் - 2ஏ பிரிவில் அடங்கிய பதவிகளில், காலியாக உள்ள, 1,947 இடங்களுக்கு பணி நியமன தேர்வு, ஜனவரி, 24ம் தேதி நடக்க உள்ளது.


விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம், நவ., 18ம் தேதிமுடிகிறது. ஆனால், 10 நாட்களாக மழை கொட்டுவதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் தேர்வு எழுத விரும்புவோர், மழை வெள்ளப் பாதிப்பால் மறு கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் மின் வினியோகம் மற்றும் இணைய செயல்பாடு பாதிப்பால், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியவில்லை. இ - சேவை மையங்களிலும் மின் வினியோகபாதிப்பு மற்றும் இணைய பிரச்னையால் நிரந்தரப்பதிவு செய்யவோ, விண்ணப்பிக்கவோ முடியவில்லை. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க, டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி