பள்ளிக் கல்வித்துறை சார்பில் 33-ஆவது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, ராசிபுரம் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறைஇணைச் செயலர் பொன்னையா வரவேற்றார். போட்டிகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.சென்னை, கடலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 19 வயதுக்குள்பட்ட மாணவ-மாணவியர், விளையாட்டு விடுதி வீரர்கள் என மொத்தம் 4,210 பேர் பங்கேற்றனர்.கால் பந்து, கூடைப் பந்து, கையுந்து பந்து, ஹாக்கி, கோ-கோ, கபாடி, கைப்பந்து, எறிபந்து, பூப்பந்து, இறகுப் பந்து, மேஜைப் பந்து, டென்னிஸ் உள்ளிட்ட 12 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் வெற்றிபெறுவோர் தேசிய அளவிலான குழுப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவர்.போட்டிகளைத் தொடக்கி வைத்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: தமிழக முதலமைச்சர் ஒரு லட்சியத்தோடு தமிழகத்தை வழி நடத்தி வருகிறார். தொலைநோக்குத் திட்டம்-2020 என்ற இலக்குப் பாதையில் கொண்டு செல்கிறார். குறிப்பாக, கல்வித்துறை வளர்ச்சியடைய வேண்டும் என செயலாற்றி வருகிறார்.தமிழகத்தில் ஏழ்மை, வறுமையால் கல்வி பாதிக்கக்கூடாது என்ற நோக்கில், அனைத்து வசதியும் மாணவர்களுக்கு செய்து தரப்படுகிறது. தரமான மாணவர்களை உருவாக்க புதிதாக 72,833 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கையால், கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் 1163 அரசுப் பள்ளிகளும் பிளஸ் 2 தேர்வில் 150 அரசுப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி அடைந்தன.2011-இல் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம் அறிவித்து செயல்படுத்தினார். சர்வதேச அளவிலான போட்டிக்கு கணினித் துறையில் மாணவர்களை உயர்த்த வேண்டும் என இது போன்ற திட்டம் தொடங்கப்பட்டது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 16 வகையான திட்டங்களை மாணவர்கள் வளர்ச்சிக்காக கொடுப்பது இங்கு மட்டும் தான். இதே போல், உடல்கல்வியிலும் கவனம் செலுத்தி மாணவர்கள் திறனை வெளிக்கொணர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.விளையாட்டுத் துறைக்கென ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது.
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறை வளர்ச்சிக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ரூ.85,680 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி