5 கலை பாடங்களுக்குநவ. 18 முதல் அரசு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2015

5 கலை பாடங்களுக்குநவ. 18 முதல் அரசு தேர்வு

'ஓவியம், சிற்பம், இசை உள்ளிட்ட, 15 கலைப் பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வு, நவ., 18ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், கலைப்பாட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். எனவே, தென் மாநிலங்களை சேர்ந்தோர், தமிழக கலைப்பாட தேர்வில் அதிக அளவில் பங்கேற்பர். இந்த ஆண்டு தேர்வுக்கு, அக்., 14ல் விண்ணப்ப பதிவுமுடிந்தது.


நவ., 18 முதல் தேர்வு துவங்கவுள்ளதாக, அரசு தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.ஓவியம், டிசைன், எம்ப்ராய்டரி, தையல், இசை, நடனம், மாடலிங், கைத்திறன், பிழை திருத்துனர், அச்சுக்கலை, புத்தகம் பைண்டிங், டி.டி.பி., ஆப்ரேட்டர் உட்பட, 15 பிரிவுகளில் தேர்வு நடக்கிறது. டிச., 19ல் தேர்வுகள் முடிகின்றன. கூடுதல் விவரங்களை, http:/www.tndge.in/ இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி