ரூ.5,400 தர ஊதியம்: தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

ரூ.5,400 தர ஊதியம்: தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழக தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.5,400 தர ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சி.ஜெயவேலு, மாவட்டத் தலைவர் பி.பிரபாகரன், செயலாளர் கே.சிவப்பிரகாசம் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:


தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.5,400தர ஊதியம் வழங்க வேண்டும்.தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக் காலத்தை 50 சதவீத ஓய்வூதிய பணிக்காலத்தில் சேர்க்க ஆணை வழங்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி