7-வது ஊதிய குழு : மகப்பேறு விடுமுறை நாட்கள்தொடர்கிறது மகப்பேறு 'லீவு': - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2015

7-வது ஊதிய குழு : மகப்பேறு விடுமுறை நாட்கள்தொடர்கிறது மகப்பேறு 'லீவு':

ஆண், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஏழாவது ஊதியக் குழு நிராகரித்து உள்ளது. எனவே, வழக்கம் போல, மகப்பேறின் போது, பெண் ஊழியர்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண் ஊழியரின் மனைவியின் பிரசவத்தின் போது, அந்த ஊழியருக்கு, 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை தொடர்கிறது. இந்த சலுகை, இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.


ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு படி:


மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மட்டும், இதுவரை வழங்கப்பட்டு வந்த, சி.சி.எல்., என்ற, 'சைல்ட் கேர் லீவ்' எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுமுறை, இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மனைவி இல்லாத ஆண் ஊழியர்கள், தங்களின், 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பணிக்காலத்தில், இரு ஆண்டுகள் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக் கொள்ளலாம். முதல் ஆண்டில், 100 சதவீத சம்பளமும், இரண்டாவது ஆண்டில், 80 சதவீத சம்பளமும், ஆண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ளபடி, கணவர் இல்லாத அரசு பெண் ஊழியருக்கு, வழக்கம் போல இந்த சலுகை தொடரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி