ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2015

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசுத்தொகை, 100 ரூபாய் மற்றும், 80 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதால், பெற்றோர், மாணவ, மாணவியர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.


அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்று முதல், ௮ம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியரிடையே, பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுபோட்டி, பள்ளி அளவில், நடத்தப்பட்டது.இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டியும், 4 மற்றும் 5ம் வகுப்புக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, நடத்தப்பட்ட போட்டிகளில், முதல் பரிசாக, 100 ரூபாயும், இரண்டாம் பரிசாக, 80 ரூபாயும் வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரை, முதல் பரிசாக, 150 ரூபாயும்,இரண்டாம் பரிசாக, 100 ரூபாயும் வழங்கப்பட்டது.பரிசுத்தொகை, வங்கியில் செலுத்தி மாற்றத்தக்க வகையிலான, 'செக்'காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 80 ரூபாய்க்கான, 'செக்,' பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு, மாணவன் பெயரில் வங்கிக்கணக்கு துவக்க வேண்டும். அதற்கு குறைந்தது, 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்ட வேண்டும். இதனால், பரிசுத்தொகையாக வழங்கப்பட்ட, 'செக்' கை, பல பெற்றோர் பணமாக மாற்ற முயற்சிக்கவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி