ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'

மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்துஉள்ளது.தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிபகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால்பராமரிக்கப்பட்டு வந்தன.ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டன; இதனால், கணக்கு பராமரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிகணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் நிர்வாகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கும் மாற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது.இதில் கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்புஓய்வூதியத் திட்டக் கணக்குகள் சரி செய்யப்பட்டன.


இதற்கிடையே, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி,புதுக்கோட்டை மற்றும் துாத்துக்குடி ஆகிய, ஏழு மாவட்டங்களில், தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான ஆசிரியர்களின், பி.எப்., கணக்கு விவரங்களை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் உள்ள, 81 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.இது பற்றி விவாதிக்க, டிசம்பர், 4ல், சென்னையில் மாவட்ட கல்வி அதிகாரி கள்அவசரக் கூட்டத்தையும், அவர் கூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி