சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தீபாவளி விடுமுறைக்கு பின்னர், தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை (நவ. 26) திறக்கப்பட்டன.இதில், குறிப்பிட்ட 24 பள்ளிகளில் மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.


தற்போது இந்த 24 பள்ளிகளுக்கும் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் விடுமுறை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.வரும் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்தப் பள்ளிகளின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி