813 விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

813 விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

2014-2015 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிக்கை எண்.19/2015


விளம்பர எண்.425

தேதி:12.11.2015

பதவிக் குறியீட்டு எண்:2015

பணி குறியீட்டு எண்:050

பதவி:கிராம நிர்வாக அலுவலர்

காலியிடங்கள்:813

சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

கல்வித் தகுதி:12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.


கட்டணம் விவரம்:

நிரந்தரப்பதிவுக் கட்டணம்: ரூ.50.

தேர்வுக் கட்டணம்: ரூ.75.

வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்:16.12.2015 நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 21 - 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இடஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி:14.12.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:14.02.2016 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in அல்லதுwww.exams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

13 comments:

  1. THERE IS NO INFORMATION ABOUT TRB

    ReplyDelete
  2. Study well. EB and TRB posting will be filled within march 2016. which dept u are.

    ReplyDelete
  3. Tnpsc group II, VAO call for yellam vandhachu pg trb matum innum announce pannala

    ReplyDelete
  4. Arumugam sir , thank you for ur info. Is this confirm news or guess? Don't mistake me sir, I'm waiting for this exam. That's y i am asking.

    ReplyDelete
  5. நாங்கள் எங்களுக்காக படித்து வெற்றி பெற்றதை புததகமாக்கி தருகிறேன் தமிழ் ஆறு முதல் பனிரெண்டு வரையிலும் மேலும் வரலாறு புவியியல் குடிமையியல் பொருளியல் அனைத்தும் Rs 200/- only contact 9976715765

    ReplyDelete
  6. Sure pgtrb will come friends...... Don't listen to others those who says that exam won't come because by saying like that they will prepare regularly..... So keep on studying

    ReplyDelete
  7. Thank you nataraj sir and sathish sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி