பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2015

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை

தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:


# பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.

# பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.

# பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்வோம்.

# திறந்தவெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.

#இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

#அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம்.

#மருத்துவமனை, பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

#குடிசைகள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் இருக்கும்இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

#ஒலியைக் குறைப்போம், செவியைக் காப்போம்.

#கொண்டாடுவோம், கொண் டாடுவோம், விபத்தில்லா தீபாவளி யைக் கொண்டாடுவோம்.மேற்கண்ட உறுதிமொழியை எடுக்குமாறு பள்ளி மாணவ-மாண விகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி