அறிவியல் கண்காட்சி போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2015

அறிவியல் கண்காட்சி போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர்' விருது; ஜவஹர்லால் நேரு தேசிய விருது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.


இதுதொடர்பாக, இயக்குனர் அலுவலகம் மூலம், சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. ஆனால், அந்த தகவல்கள் பெரும்பாலான பள்ளிகளுக்கு கிடைக்காமல், ஒவ்வொரு ஆண்டும்,லட்சக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றம் அடைவதாக கூறப்படுகிறது.தற்போது, நேரு தேசிய விருதுக்கான அறிவியல் கண்காட்சி மாநில அளவில், டிசம்பர், 1 முதல், 3ம் தேதி வரை பெரம்பலுாரில் நடக்கிறது. பள்ளி அளவில், அக்., 16ல் நடந்தது.


கல்வி மாவட்ட அளவில், நவ., 3; வருவாய் மாவட்ட அளவில், 16ம் தேதி நடக்கிறது.ஆனால், 'இந்த விவரங்கள், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரியவில்லை' என, ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.'குறிப்பிட்ட சில பள்ளிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன; மற்றவர்களுக்கு மறைக்கப்படுகிறது. திறமையான மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இணையதளம் உருவாக்கி, அதில் இந்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி