கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களின் கோட்டா உயர்கிறது: 6 இடங்களுக்கான சிபாரிசு 10 ஆக உயர்த்த அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2015

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களின் கோட்டா உயர்கிறது: 6 இடங்களுக்கான சிபாரிசு 10 ஆக உயர்த்த அரசு முடிவு

கேந்திரிய வித்யாலயா' எனப்படும், மத்திய அரசுப் பள்ளிகளில், எம்.பி.,க்களுக்கான மாணவர் சேர்க்கை கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது, ஆறு மாணவர்களுக்கு சிபாரிசு செய்து வரும் எம்.பி.,க்கள், இனிமேல், 10 மாணவர்களுக்கு சிபாரிசு செய்ய, விரைவில் வாய்ப்பு ஏற்பட உள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ், நாடு முழுவதும் நடத்தப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.


இந்தப் பள்ளிகளில், 'சீட்' வாங்குவது மிகவும் கடினம். இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு, எம்.பி.,க்கள் சிபாரிசு செய்ய, 'கோட்டா' உள்ளது. அதாவது, ஆண்டுக்கு, ஆறு குழந்தைகளுக்கு, எம்.பி.,க்கள் பரிந்துரை செய்யலாம்.இதனால், தங்கள் குழந்தைகளுக்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 'சீட்' கிடைக்க, ஏராளமானோர், எம்.பி.,க்களிடம் சிபாரிசு கடிதம் பெற முயற்சிப்பது வாடிக்கை.


சிபாரிசு:


ஆனால், ஆறு மாணவர்களுக்கு மட்டுமே, எம்.பி.,க்கள் சிபாரிசு செய்யமுடியும் என்பதால், தங்களைத் தேடி வரும் கட்சிக்காரர்கள் மற்றும்பொதுமக்களை திருப்தி படுத்த முடியாமல், எம்.பி.,க்கள் திணறுகின்றனர்.இதையடுத்து, தங்களுக்கான கோட்டா எண்ணிக்கையை, அதிகரிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாகவே, மத்திய அரசிடம், எம்.பி.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.எம்.பி.,க்களுக்கான கோட்டா, இரண்டு மட்டுமே என இருந்த நிலையில், கடந்த 2012ல் தான், இந்த எண்ணிக்கை, ஆறு ஆக உயர்த்தப்பட்டது.


பார்லி.,யில்...:


ஆனாலும், இது போதுமானதாக இல்லை என, எம்.பி.,க்கள் பலர், பார்லிமென்ட்டில் குரல் கொடுத்து வந்தனர்.மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, எம்.பி.,க்கள் சார்பில் தரப்பட்ட நெருக்கடியை அடுத்து, இதுகுறித்து பரிசீலிப்பதாக, அத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, கேந்திரிய வித்யாலயா அமைப்பின் நிர்வாக இயக்குனர்கள் கூட்டம், டில்லியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், எம்.பி.,க்களின் மாணவர்களுக்கான சேர்க்கை கோட்டாவை,தற்போதுள்ள, ஆறுலிருந்து, 10 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து, வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கேந்திரிய வித்யாலயாபள்ளிகள் - ஓர் பார்வை:


துவக்கம்:1963, டிசம்பர், 15

எண்ணிக்கை:இந்தியாவில், 1,796; வெளிநாடுகளில், ஏழுமாணவர்கள்:11 லட்சத்து, 48 ஆயிரத்து, 340

ஆசிரியர்கள், ஊழியர்கள்:56 ஆயிரத்து, 500


சிறப்பம்சங்கள்:

* நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம்

* இந்தி, ஆங்கில பாடத்திட்டம்

* இருபாலார் பள்ளி 6 - 8ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயம்; 12ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் விருப்ப பாடம்; இந்தியபள்ளிகளில் ஜெர்மன் மொழியும், வெளிநாடுகளில், பிரெஞ்ச் மற்றும் ரஷ்ய மொழிகளையும் கற்கலாம்


* சி.பி.எஸ்.இ., கல்வித்திட்டம்

தலைமையகம்:டில்லி

அமைச்சகம்:மத்திய மனிதவளத் துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி