திருக்குறள் போட்டியில் சாதனை: மாணவர்களுக்கு பார்லி., யில் பாராட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2015

திருக்குறள் போட்டியில் சாதனை: மாணவர்களுக்கு பார்லி., யில் பாராட்டு

மாநில அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பார்லிமென்டில் டிச.,17ல் பாராட்டு விழா நடக்கிறது.பா.ஜ., எம்.பி., தருண் விஜய் முயற்சியால் மாநில அளவில் பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நடந்தது. நவ., 1ல் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றம் சார்பில் தமிழக அளவில் போட்டிகள் மதுரையில் நடத்தப்பட்டன.


இதில் 133 மாணவர்கள் வென்றனர்.வெற்றி பெற்ற சிலர்: பள்ளிகள் அளவில் காரைக்குடி ஸ்ரீகலைவாணி பள்ளி பிளஸ் 1 மாணவி பானுப்பிரியா முதலிடம் பெற்றார். சிவகங்கை மாவட்ட அளவில் காரைக்குடி கிட் அன்ட் கிம் பொறியியல் கல்லுாரி மாணவி சுவாதி, அமராவதிபுதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரி மாணவி நாச்சாள், உமையாள் ராமநாதன் கல்லுாரிமாணவி சிவரஞ்சனி, திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெய்பிரசாத், காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., பள்ளி மாணவர் சூரியபிரகாஷ், காரைக்குடியை சேர்ந்த நிவேதினி கென்சியா(திருச்சி ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி), திலீபன் (சென்னை லயோலா கல்லுாரி), மணிமேகலை (மதுரை அரசு சட்டக்கல்லுாரி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.பார்லி.,யில் பாராட்டு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, டிச.,17 பார்லிமென்டில் பாராட்டு விழா நடக்கிறது. மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ருமிதி ராணி தலைமை வகிக்கிறார். பார்லிமென்ட் வளாகம், ஜனாதிபதி மாளிகை, டில்லியில் முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி