"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி' கொள்கையை ரத்துசெய்ய வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2015

"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி' கொள்கையை ரத்துசெய்ய வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.ஆறு வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது.


கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமான இந்தக் கொள்கையால், மாணவர்கள் தங்களுக்கு நடத்தப்படும் ஆண்டுத் தேர்வுகளை தீவிரமாகக்கருதுவதில்லை; இதனால், அவர்களின் கல்வித் தரம் குறைவதுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பல்வேறு மாநில அரசுகள் கருதுகின்றன. இதையடுத்து, கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை தொடர்பாக, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், கட்டாயத் தேர்ச்சி கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி