உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்: அரசு பள்ளி எம்.பி.சி., மாணவியர் பயன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2015

உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்: அரசு பள்ளி எம்.பி.சி., மாணவியர் பயன்

தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம், ஆறாம் வகுப்பிலிருந்து, உதவித்தொகை வழங்கப்படுகிறது.


இந்த உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவியரின், குடும்ப ஆண்டு வருமானம், 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது. அதிகரித்து வரும் விலைவாசியால், 25 ஆயிரம் ஆண்டு வருமானம் என சான்றிதழ் வழங்குவதில், வருவாய்த்துறை அலுவலர்கள் தயக்கம் காட்டினர். இதனால், பல மாணவியர் உதவித்தொகை பெற முடியாமல் போனது.


இதற்காக, வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை இருந்து வந்தது. தற்போது, வருமான வரம்பை நீக்கி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விடுபட்ட மாணவியரின் வங்கிக்கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணியை, விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி