மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கு அறிவிப்பு-ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கு அறிவிப்பு-ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.பள்ளிக்கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு அடிப்படையில் நியமிக் கப்பட்டு வந்தனர்.


ஆரம்பத்தில் மாவட்ட அளவிலான பதிவுமூப்பும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டது.இந்த நிலையில், சிறப்பாசிரி யர் நியமனம் தொடர்பாக தொட ரப்பட்ட ஒரு வழக்கில், வெறுமனே பதிவுமூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத் தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, பதிவு மூப்பு அடிப்படையில் இல்லாமல் போட்டித் தேர்வு மூலம் சிறப்பா சிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.அது தொடர்பான அரசாணை 17.11.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி,பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதில் 95 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும், எஞ்சிய 5 மதிப்பெண், உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்காணல், என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.போட்டித் தேர்வு மூலம் சுமார் 1,400 சிறப்பாசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்கான பணி களை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வந்தது.


இதற் கிடையே, பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊன முற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளி களுக்கான 3 சதவீத ஒதுக் கீட்டை (ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம்) அரசுப் பணி யில் ஒழுங்காக நடைமுறைப் படுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப் பித்தது.விண்ணப்பங்கள் தயார்இதைத் தொடர்ந்து, ஓவியம், தையல், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணி களில் எந்தெந்த மாற்றுத்திற னாளிகளுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஓவிய ஆசிரியர் பணியில் பார்வையில்லாதவர்களுக்கோ, அதேபோல் உடற்கல்வி ஆசிரி யர் பணியில் உடல் ஊனமுற்ற வர்களுக்கோ இட ஒதுக்கீடு வழங்க இயலாது.மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர் பாக அரசு அனுமதி கிடைத்ததும் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறி விப்பு உடனடியாக வெளியிடப் படும் என்றும் விண்ணப்பப் படிவங்கள் தேவையான அளவு அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அனுமதி கிடைத்ததும் சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

20 comments:

  1. Hello kalviseithi viewers this month confirmed pg trb announced dont argue. Start announcement counting of days study wel frds

    ReplyDelete
  2. Thank u sir. Posting evlo irukum

    ReplyDelete
    Replies
    1. You want only one job sir... Do not bother about vacancy...study well..

      Delete
  3. S absolutely crct sir near 2000vacancy irukkm confirmed 600retirement konjam bt to pg fill agatha vacancy and thogupputhium sheet serthu varavullathu education dept sarbaga thagaval ullathu nan arinthavarai

    ReplyDelete
  4. Sir nan bsc, b.ed and na December la than pg final year exam ezuthaporan periyar university correspondent la !!Na eligible ah sir pg trb ku

    ReplyDelete
  5. 2010 c.v case நாளை மதியம் 2.15pmதேரர்பு வருகிறது

    ReplyDelete
  6. 2010 c.v caseநாளை மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பு வருகிறது

    ReplyDelete
  7. Any TRB information for arts and science colleges

    ReplyDelete
  8. Any TRB information for arts and science colleges

    ReplyDelete
  9. Pg trb varaathu k don't believed any one

    ReplyDelete
  10. வணக்கம் அன்பரே. எனது நண்பர் ஒருவர் காது கேளாதவர். அவர் எம்.காம்., மற்றும் காது கேளாதோருக்கான சிறப்பு பி.எட்., பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். சேலம் மாவட்டத்திலேயே அவர் ஒருவர் தான், இந்த சிறப்பு பட்டப்படிப்பு முடித்துள்ள மாற்றுத்திறனாளி. சென்ற சில வருடங்களுக்குள் நடந்த ஆசிரியர்களுக்கான தேர்வு விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்கள். அவர் கிராமத்தில் சிறிய விவசாய தந்தையில்லா குடும்பத்திலிருந்து வெற்றிகரமாக படிப்பை முடித்திருந்தாலும், தன் விண்ணப்பம் நிராகரித்த தவறை, தேர்வு சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளை அணுகி எடுத்துக்கூற தெரியாமல், வாய்ப்பு இழந்து விட்டார். வாய் பேசக்கூடிய, காது கேளாத அவருக்கு இப்போது சிறப்பாசிரியர் பணியோ, வேறு ஆசிரிய பணிகள் வாய்ப்பு இருக்கிறதா? தயவு செய்து, இதுகுறித்து தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எம் மின்னஞ்சல் முகவரி: dhava.ambi@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி