சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட வாய்ப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2015

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட வாய்ப்பு?

மழை வெள்ள பாதிப்புகளால் தொடர் விடுமுறைக்குப் பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அதிக விடுமுறையை சமன் செய்யும் வகையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறையை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 9-ம் தேதி தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சென்னையில் இன்றுதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 11 வேலை நாட்களை இழந்துவிட்டதால் நடத்த வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்துவிட்டு அந்தநாட்களில் பாடங்களை நடத்த தனியார் பள்ளிகள் அலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு


அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஏற்கெனவே திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ல் தொடங்கும். ஏதாவது தவிர்க்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் தவிர இந்த அட்டவணையில் எவ்வித மாற்றமும் இருக்காது" என்றார்.அதேவேளையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இழந்த வேலை நாட்களை ஈடுகட்டுவது தொடர்பாக அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப்பட்ட பின்னர் முடிவு எட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் தனியார் பள்ளிகள் சில அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளன. சயன் பள்ளிக் குழும தலைவர் என்.விஜயன் கூறும்போது,"டிசம்பர் 17-ல் அரையாண்டுத் தேர்வை தொடங்க விரும்புகிறோம். சிறிய வகுப்புகளுக்கு முக்கியமான 5 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும். மற்ற வகுப்புகள் குறித்து பின்னர் முடிவு எட்டப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி