புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2015

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'

மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.


அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களைதவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின.

தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன.2015 செப்., 26 வரை 15.69 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.41,771 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 27.69 லட்சம் ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ரூ.47,231 கோடி செலுத்தப்பட்டது. 4,15,820 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,106 கோடி செலுத்தப்பட்டது.மொத்தம் 93.27 லட்சம் ஊழியர்களிடம் ரூ.98,653 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4.03 ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பிடித்த தொகைக்கான ஒப்புகை சீட்டு மட்டும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புகை சீட்டால் எந்த பயனும் இல்லை என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல்களை பெற்ற திண்டுக்கல்ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. ஆணையத்தில் பணம் செலுத்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமாவது (இறப்பு அல்லது ஓய்வு பெறும்போது) பணப்பலன் கிடைக்கிறது.தமிழக அரசு ஆணையத்தில் பணம் செலுத்தாததால் பணப்பலன் வழங்க முடியாமல் தவிக்கிறது. சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று பணப்பலன்பெற்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித பலனும்கிடைக்கவில்லை, என்றார்.

13 comments:

  1. PLS ALL AFFECT TET MEMBERS PARTICIPATE IN THIS MEETING.ALL LEGAL PERMISSION ARE FOLLOW IN THIS MEETING...PLS CONTACT THIS PERSONS...1)PARATHAMAN-KRISHNAKIRI-9443264239,2)SAIT-DHARMAPURI-9025320240,8675279520,3)RATHAKRISHNAN-SALEM-9965706150,4)SIVA-NAGAPATINAM-8807148088,5)AMALAJOSE- TIRUJI-9788460382,6)RAVI-ERODE-9865107281,7)MANIMARAN-KARUR-9894174462,8)MURUGAN-MADURAI-9486467543,9087967543,9)PANDI-VILUPURAM-8190089252,10)MOHAMED KAMIL-THENI-9940841502.......

    ReplyDelete
  2. அரசுதான் ஏதாவது செய்ய முன் வர வேண்டும்

    ReplyDelete
  3. Replies
    1. போராட்டத்திற்கு செல்வோம். நமது உரிமையை வெல்வோம். தொடர்புக்கு மதுரை மேலூர் தங்கச்சாமி : - 9789181487

      Delete
    2. போராட்டத்திற்கு செல்வோம். நமது உரிமையை வெல்வோம். தொடர்புக்கு மதுரை மேலூர் தங்கச்சாமி : - 9789181487

      Delete
  4. Cps missing. Credit ஐ sg teacher எப்படி சரி செய்வது யாரெனும் சொல்லுங்க Sir.

    ReplyDelete
  5. Dear frds tet case on Nov 6 is on register court only. Not in supreme court. After 6 only they will decide hearing date.

    ReplyDelete
  6. 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
    வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது
    அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்
    முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .
    அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
    கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233
    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete
  7. vetri namathey . nalla vidiyal novemberil thodanga irukirathu..,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி