ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2015

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு

கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:


தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.


அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போதுவரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம்தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி