வெள்ள நிவாரணத்துக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம் அளிப்பு - முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

வெள்ள நிவாரணத்துக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம் அளிப்பு - முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம்

மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டாவில் இடம்பெற்றுள்ள 18 ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் இயற்கைப் பேரிடரான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்கு ஆசிரியர்களின் பங்களிப்பை வழங்கும் வகையில் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டாவில் இடம்பெற்றுள்ள 18 ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.எனவே, எங்களின் ஒருநாள் சம்பளப் பிடித்த தீர்மானத்தினை தாங்கள் ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்க்க உதவுமாறும் ஜாக்டா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Good news to hear. Tamilargala kodi kanakula sambalam vangura nadigargal yarum seiala. But namma seirathu good. But ethu vema poe pathikapata makkala reach aganum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி