கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றிசர்வதேச பயற்சியாளர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2015

கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றிசர்வதேச பயற்சியாளர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கூட்டு முயற்சி மற்றும் நிதி நிலை மேம்பாடு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.


பயற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .சர்வதேச பயற்சியாளர் ராமநாதன் ஆசிரியர்களுக்கு கூட்டு முயற்சி ,வேலையை மனப்பூர்வமாக செய்தல் போன்றவற்றின் மூலம் நிறுவனத்தை வெற்றி பாதையில் கொண்டு செல்வது தொடர்பாகவும், நிதி நிலை மேம்பாடு தொடர்பாக(எஸ்.ஜி .ஆர்.சி ) பங்கு சந்தை,தங்கம்,இடம் வாங்குதல்,ரொக்கம் கையிருப்பு எனும் பகுதிகளில் விரிவான விளக்கங்களும் ,நிதியை பாதுகாப்பது,கடன் வாங்கமால் எவ்வாறு நமது வாழ்க்கையை திட்டமிட்டு மேம்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக பயிற்சி அளித்தார்.பயிற்சியில் சமூக ஆர்வலர் அடைக்கலராஜ்,பெற்றோர்கள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி