கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது

திருத்தி கொள்வதற்காக மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது.உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்துஎந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்தது.அகில உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று கையால் எழுதிய பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள உத்தரவிடப்பட்டது.


கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்டு’கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அதனுடைய கால அவகாசம் நவம்பர் 24-ந்தேதி வரை வழங்கப்பட்டது.அதற்கு முன்பாக கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் வழங்கிவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது. பின்னர் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த செவ்வாய் கிழமை(24-ம் தேதி) உடன் நிறைவடைந்தது. எனவே இனி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி