நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சசிதரன் (7). இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்த வருகிறார். வியாழக்கிழமை மாலை சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார் எனவும், அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி (35) மாணவர் சசிதரனை மிரட்டி, கையால் அந்த மலத்தை அள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.வீட்டுக்குச் சென்ற மாணவர் சசிதரன், தனது பெற்றோரிடம் இதைத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் 150 பேர் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று,முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஆசிரியையை இட மாற்றம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து இரண்டு நாள்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
மாணவரை மனிதக் கழிவை கையால் எடுக்கச் சொன்ன நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், அவரைப் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டர்.இதுகுறித்த விவரம்:
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சசிதரன் (7). இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்த வருகிறார். வியாழக்கிழமை மாலை சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார் எனவும், அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி (35) மாணவர் சசிதரனை மிரட்டி, கையால் அந்த மலத்தை அள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.வீட்டுக்குச் சென்ற மாணவர் சசிதரன், தனது பெற்றோரிடம் இதைத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் 150 பேர் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று,முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஆசிரியையை இட மாற்றம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து இரண்டு நாள்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சசிதரன் (7). இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்த வருகிறார். வியாழக்கிழமை மாலை சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார் எனவும், அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி (35) மாணவர் சசிதரனை மிரட்டி, கையால் அந்த மலத்தை அள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.வீட்டுக்குச் சென்ற மாணவர் சசிதரன், தனது பெற்றோரிடம் இதைத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் 150 பேர் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று,முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஆசிரியையை இட மாற்றம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து இரண்டு நாள்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி