பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடன், உயர்கல்வி நிறுவனங்களில் சேர விருப்பமுள்ள மாணவர், மாணவிகள் ஜே.இ.இ. எனப்படும் பொது நுழைவு தேர்வினை எழுதலாம்.பொதுவாக பிளஸ்-2 முடித்தவுடன், பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற உயர் படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என மாணவர்கள் பலரும் விரும்புவதுண்டு.
பல மாணவர்களின் வாழ்நாள் கனவே அத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதாகத்தான் இருக்கும்.இத்தகைய உயர்தர கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு, அவர்கள் உயர்கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே அதாவது இறுதியாண்டு படிக்கும் போதே, பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும்.இத்தகைய கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய அளவில்நடத்தப்படும் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் என்ற பொது நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு, 2016 மே, 22ல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்வினை, கவுஹாத்தி ஐ.ஐ.டி., நடத்துகிறது. இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கும். ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுதலாம். கூடுதல் விபரங்களுக்கு www.jeeadv.ac.inindex.php என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி