'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2015

'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை

பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன.


இவற்றில், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி மக்கிப் போகாமல், அப்படியே கிடப்பதால், அவமரியாதை செய்யப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதை தவிர்க்க, தமிழகத்தில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் தயாரிப்பு,விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான, பொதுத்துறை முதன்மைச் செயலர் ஜதீந்திரநாத் ஸ்வைனின் உத்தரவு, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது

1 comment:

  1. தமிழக அரசிற்கு என் நன்றி... உடனடியாக அமலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி