இலவச பாடப்புத்தகம், சீருடை மீண்டும் வழங்க முதல்வர் ஜெ.,உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2015

இலவச பாடப்புத்தகம், சீருடை மீண்டும் வழங்க முதல்வர் ஜெ.,உத்தரவு

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர், நேற்று வெளியிட்ட அறிக்கை:


கன மழையால், சில பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதமடைந்தது தெரிய வந்துள்ளது. எனவே, வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும், இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடை ஒன்று வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், கன மழைக்கு பலர் ரேஷன் கார்டை இழந்து விட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு, நகல் அட்டைகளை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி