WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். Download Now. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2015

WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். Download Now.

WhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளைசெய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம்பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.


சில தினங்கள் முன் வாட்ஸ்ஆப் தனது புதிய பதிப்பை வெளியீட்டு உள்ளது. இதில் இரண்டு சிறப்பு வசதிகளை வாட்ஸ்ஆப் புகுத்தி உள்ளது. உங்களுக்கு இது பெரிதும் வசதியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த பதிவில் புதிய வசதிகளை தெரிந்துக்கொள்வதோடு புதிய WhatsApp 2.12.342 பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

1. WhatsAppல உங்களுக்கு மிக முக்கியமான அல்லது பிடித்த மேசெஜ் எப்போதோ வந்து இருக்கும். அதை இப்போது பார்க்க நினைத்தால் விரைவில் பார்க்க முடியாது. ஆயிர கணக்கான மேசெஜ்கிடையே எப்படி கண்டுபிடிப்பது. சர்ச் செய்தாலும் பொறுமை வேண்டும். இனி அப்படி கஷ்டப்பட தேவை இல்லை. நீங்கள் விரும்பிய அல்லது முக்கியமான மேசெஜ்களை Starred Messages பகுதியில் இணைத்து விட்டால் உடனே படிக்க முடியும்.நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு முக்கியமான மின்னஞ்சலை Starred செய்யும் வசதி இருக்கும். இதன் மூலம் Starred செய்த மின்னஞ்சலை மட்டும் தனியாக பார்க்க முடியும். இதே வசதியை WhatsApp இப்போது புதியபதிப்பில் கொடுத்து உள்ளது. படம் பாருங்கள்.
இங்கே கிளிக்செய்து WhatsApp 2.12.342 இன்று வெளிவந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது Play Storeக்கு வர சில தினங்கள் ஆகும். (இரண்டாவதாக உள்ளது Dropbox லிங்க் - மொபைலில் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தி காட்டினால் Ignore செய்து விடுங்கள். Dropbox லிங்க் என்பதால் பெரும்பாலான மொபைல்கள் எச்சரிக்கை செய்யும்.)இன்ஸ்டால் செய்த பிறகு WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் வந்து இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும்.

2. மொபைலில் Android 6.0 Marshmallow வைத்து இருப்பவர்கள் இனி WhatsApp புதிய பதிப்பின் மூலம் நேரடியாக யாருக்கும் வீடியோ, படங்கள் போன்றவற்றை விரைவில் Share செய்ய முடியும். இந்த வசதி மூலம் மற்ற அப்ளிகேசங்களுக்கும் தங்குதடையின்றி விரைவாக பெரிய வீடியோகளை அனுப்ப முடியும். இதனை WhatsApp Direct Share என்று அழைக்கிறார்கள். இந்த வசதி Android 6.0 மொபைல்களுக்கு மட்டுமே தற்போது சாத்தியமாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி