WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2015

WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி?

WhatsApp அப்ளிகேசனில் ப்ரோபைல் படத்தை (DP - Display Picture) செட் செய்யும்போது பல சமயங்களில் முழுபடமும் தெரியாது. குறுப்பிட்ட (Crop) ஒரு பகுதி மட்டுமே தெரியும். இன்று முழு படத்தையும் எப்படி பிரோபைல் படமாக செட் செய்வது என்று பார்ப்போம்.
முதலில்இங்கே கிளிக்செய்து SquareDroid என்ற இந்த அப்ளிகேசனை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது வெறும் 2MB அளவே உடைய சிறிய அப்ளிகேஷன்.
பிறகு அதனை திறந்து Pick a Photo டச் செய்துஉங்களுக்கு பிடித்த பெரிய சைஸ் போட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது தேவைப்பட்டால் இதனை Rotate செய்தல், சிறிய அளவு, பெரிய அளவு மாற்றுதல் மற்றும் கலர் பெல்லேட் டச் செய்து நீங்கள் விரும்பியவாறு மாற்ற முடியும்.

முடிவில் வலது மேல் ஃபிளாப்பி ஐகானை அழுத்தி சேமிக்கும் போது JPG மற்றும் PNG பைலாக சேமிக்க முடியும். மேலும் படத்தின் துல்லியமான தரத்தினை வழங்க முடியும். முடிவாக கீழே ஓகே டச் செய்தால் அது தனி இமேஜ் பைலாக நோட்டிபிகேஷன் ஏரியாவில் தெரியும் அதை டச் செய்து வலது மேல் பக்கம் வரும் மெனுவில் Set Picture as என்பதை டச் செய்தால் கீழே வரும் மெனுவில் WhatsApp Profile Photo மூலம் முழுமையாக செலக்ட் செய்து முழுபடத்தையும் ப்ரோபைல் படமாக செட் செய்ய முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி