2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2015

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.


தமிழக அரசு அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் உட்பட அனைத்து வர்த்தக வங்கி களுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள்,வாரியங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அறிவித்துள்ள விடுமுறை அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 1-ம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 8-ம் தேதி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும்.


அதேபோல், சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. அக்டோபர் மாசந்தான் உள்ளதுளயே நல்ல மாசம்

    ReplyDelete
  2. எப்படி வந்தாலும் தொடக்கக்கல்வித்துறை 220நாட்களும் பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்ட நாட்களும் பணியாற்ற வேண்டும்... வேலைநாட்கள் குறையும் பட்சத்தில் சனி கிழமைகளில் பள்ளி செயல்படும் கட்டாயமாகும்... இதை பொருத்தே பள்ளி நாள்காட்டி அமைக்கப்படும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இவ்ளோ அப்பாவியான ஆசிரியரா நீங்க!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி