கிராமங்கள் தோறும் 3.7 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்: ஊரக வளர்ச்சித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2015

கிராமங்கள் தோறும் 3.7 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்: ஊரக வளர்ச்சித்துறை தகவல்

கனமழை ஓய்ந்துவிட்ட நிலையில் நிலத்தின் ஈரத்தை பயன்படுத்தி மரங்களை வளர்க்கும் நோக் கில் கிராமப்பகுதிகளில் 3.75 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை தொடங் கியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆறு, ஏரிக் கரையோரங்கள் மற்றும் சாலை யோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.


மேலும், மண் அரிப்பினாலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன.இதனால், மரங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், அனைத்து கிராமப்பகுதி களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர் கள் மூலம், 3.75 லட்சம் மரக்கன்று களை நடும் பணி தொடங்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் முத்துமீனாள் கூறியதாவது: அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப் பட்டுள்ள மரக்கன்றுகளை, கிராமப் பகுதிகளில் நட திட்டமிடப் பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடும் தொழிலாளர் களுக்கு 8 குழிகளுக்கு ரூ.188 கூலியாக அளிக்க உள்ளோம்.இந்த பணிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கிராமப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பை களை அகற்றும் பணியிலும் ஈடுபடுவார்கள். திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை காவலர் பணியாளர்களும், கிராமப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 8 குழிகளுக்கு ரூ.188 கூலியாக அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி