தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2015

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சத்து 99 ஆயிரத்து 444-க்கான வங்கி வரைவோலையினை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வழங்கினார்.


தொடர்ந்து தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத்தொகையை ஐந்து மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார்.பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், மாவட்டஊராட்சிக் குழுத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர்அ.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி