அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2015

அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு'

'அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:


* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள், மின் கட்டணத்தை, 2016 ஜனவரி,31ம் தேதிக்குள் செலுத்தலாம்; அபராதம் கிடையாது

* டிச., 7ம் தேதி முதல் நடக்கவிருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; இது, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.

* குப்பை அகற்றும் பணயில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடப்படும். பாதுகாப்பு முக கவசம், கையுறை, மழை கோட், 'கம்யூட்ஸ்' வழங்கப்படும்

* வெள்ளம் பாதித்த வீடுகளுக்கு, தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர், தண்ணீரை சுத்தம் செய்ய, 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மொத்தம், 2,000 டன் பிளீச்சிங் பவுடர்; 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும

்* வெள்ள பகுதிகளில் நடத்தப்படும், 1,105 மருத்துவ முகாம்கள் தொடரும்

* மலிவு விலை காய்கறிக் கடைகளில், உருளைக் கிழங்கு, கிலோ, 23 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; வெளிச்சந்தையில் கிலோ, 45 ரூபாய். எனவே, கூடுதலாக, 100 டன் உருளைக் கிழங்கு, 75 டன்வெங்காயம் கொள்முதல் செய்து, விற்பனை செய்யப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி