அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு: தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்; முதல்வர் ஜெயலலிதா விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2015

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு: தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்; முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பானது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:


தொடர் மழை காரணமாக, பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனால், அரையாண்டுத் தேர்வுகளும் ஜனவரியில் ஒத்திவைக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது. சில தனியார் பள்ளிகள்உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாகத் தெரிகிறது.அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். காய்கறிகள்-குளோரின் மாத்திரைகள்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்தக் கடைகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.23-க்கு விற்கப்பட்டாலும், வெளிச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்கப்படுகிறது. எனவே, கூடுதலாக 100 டன் உருளைக்கிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும்.நோய்த் தொற்றைத் தடுக்க வீடுகளுக்கு தலா அரை கிலோ பளீச்சிங் பவுடர், தண்ணீரை சுத்தம் செய்ய 20 குளோரின் மாத்திரைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அளிக்கப்படும். இதற்காக உடனடியாக 2ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர்-ஒரு கோடி குளோரின் மாத்திரைகள் கொடுக்கப்படும். இப்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.


துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள்: குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு நோய் தடுக்காமல் இருக்க தடுப்பூசி போடப்படும். மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு முக கவசங்கள், கையுறைகள், மழை கோட் உள்ளிட்டவை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. South tamilnadu side la already run correct working days... In 2nd term.. Not exams December OK.. But holidays?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி