பேனாவால் கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லும்: வாட்ஸ் -ஆப் புரளிக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2015

பேனாவால் கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லும்: வாட்ஸ் -ஆப் புரளிக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி

ரூபாய் நோட்டுகளில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது கிறுக்கப்பட்டிந்தால் அவை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வெளியாகி வரும் தகவல்களை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


ரூபாய் நோட்டுகளில் சொற்களோ, எழுத்துக்களோ எழுதப்பட்டிருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு (2016 ஆம் ஆண்டு தொடக்கம் முதல்) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப்-பில் தகவல் பரவி வருகிறது. இது முழுவதும் தவறு. அந்தநோட்டுகள் அனைத்தும், சட்டப்படி செல்லும். ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால், அவற்றைப் பெற்றுக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை தனது கொள்கையாக ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.


இதற்கு, அந்த ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லாது என்று அர்த்தம் அல்ல. அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ரூபாய் நோட்டுகளுக்கு இறுதி தேதி என்று எதுவும் இல்லை.ஆதலால், ரூபாய் நோட்டுகள் தொடர்பான வதந்திகளைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அதில் எந்த உண்மையும் இல்லை என்று ரகுராம் ராஜன் குறிப்பிட் டுள்ளார்.இதேபோல், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையிலும், எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏற்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி