மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.12 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2015

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.12 கடைசி

அகில இந்தி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க 12.1.2016 கடைசித் தேதியாகும். அபராத கட்டணத்துடன்10.2.2016 வரை விண்ணப்பிக்கலாம்.அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ளஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீதத்தில் மாணவர் சேர்க்கையைச் செய்வதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


வருகிற 2016-ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 1-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். இவை அனைத்தும் "அப்ஜெக்டிவ்' (கொள்குறி) வகை தேர்வு முறைக் கேள்விகளாக இருக்கும்.இதற்கு விண்ணப்பிக்க 12-1-2016 கடைசித் தேதியாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க 10-2-2016 கடைசித் தேதியாகும்.இது தொடர்பான மேலும் விவரங்களை www.aipmt.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி