தேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது!!! திருச்சி- சிவா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2015

தேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது!!! திருச்சி- சிவா

நாடாளுமன்றத்தில் பேச்சுசமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவருக்கும் ஆணிவேராக, அடித்தளமாக சீரிய பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள்பலர் என்னிடம் தேர்தல் காலங்களில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற செல்லும்போதும், அது தொடர்பானபணிகளில் ஈடுபடும்போதும் சந்திக்க நேர்கின்ற அவலங்களை, குறிப்பாகபெண்கள் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை தேவைகளுக்குகூட அல்லாட நேர்கின்ற துயர அனுபவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மன, உடல் அயர்ச்சியினால் மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பதில் தவிர்க்க இயலாத சுணக்கம் ஏற்படுவதையும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் நான் அறிய நேர்ந்தது. நான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நேற்றைய தினம் 18 டிசம்பர் நாளன்று நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தனி நபர் மசோதாவை நான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவு குடியரசு தலைவரோ, மாநில ஆளுநரோ தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளுக்கு தேர்தல்பணிகளுக்கு தேவை என்று கருதுகின்ற பணியாளர்களை தந்து உதவிட வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறது.அரசியல் சட்டத்தை திருத்தினால் தவிர இதற்கு வேறு வழி எதுவும் கிடையாது. என்னுடைய மசோதா அரசியல் சட்டத்தினை திருத்தி அதில் தேர்தல் பணிகளில் ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும் என்ற சொற்களை சேர்த்திட கோருகிறது.2007 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று இதற்குவலு சேர்க்கிற வகையில் தரப்பட்டிருப்பதை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இது ஒரு முயற்சி என்னுடைய சக்திக்கு உட்பட்ட வரையில். நல்லது நடக்கும் என தொடர்ந்து நடை போடுவோம்.ஆசிரிய சமுதாயம் இதை வரவேற்கும் என்றே நான் நம்புகிறேன்.

2 comments:

  1. மிகவும் வரவேற்கப்பட வேண்டிய பேச்சு.ஆனால் நடைமுறைக்கு இப்போதைக்கு வராது.குறைந்த பட்சம் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து இப்போதே விலக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி