வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2015

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலர் என்.பசுபதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக தலைநகர் சென்னை உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பேரிடரால் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசுடன் இணைந்து அவர்களுக்கு துணையாகப் பணியாற்ற எங்களது சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், அரசுக்கு உதவும் வகையில் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்றுள்ள, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் சுமார் ரூ. 1 கோடியை நிவாரண நிதியாக வழங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி