பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2015

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு

அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசுஉத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது.


இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறைஉத்தரவிட்டுள்ளது.ஊராட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி தலைமைஆசிரியர்கள் கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் செயல்படுவர்.

ஊராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளி துப்புரவுபணியாளருக்கு ரூ.750 மற்றும் துடைப்பம், பிளீச்சிங் பவுடர், இதரசெலவுகளுக்கு ரூ.300 வழங்கப்படும்.நடுநிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ. ௧,௦௦௦, இதர செலவுக்கு ரூ.500 வழங்கப்படும். உயர்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.1,500, இதர செலவுக்கு ரூ.750, மேல்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.2,௦௦௦, இதர செலவுக்கு ரூ.௧,௦௦௦ வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி