மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2015

மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.


அதே சமயத்தில், ஊர்திப்படி பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் வழங்கிய, தேசிய அடையாள சான்றையே ஏற்க வேண்டும் என, மாநில ஆணையர் கூறியிருந்தார். அதைஉறுதி செய்யாமல், அரசாணை உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. செவித் திறனை இழந்து, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு, ஊர்திப்படிமறுக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் கூடாது என வலியுறுத்தியும், சமீபத்திய அரசாணையில், அது இல்லாததது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி