மாற்று திறனாளிகளை ஊக்க படுத்துங்கள்கல்லூரி பேராசிரியை பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2015

மாற்று திறனாளிகளை ஊக்க படுத்துங்கள்கல்லூரி பேராசிரியை பேச்சு

சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை வாசுகி வரவேற்றார்.


பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியையும்,நாட்டு நலப் பணி திட்ட அலுவலருமான வீரலட்சுமி சிறப்புரை வழங்கி பேசுகையில் , மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் மாற்று திறனாளிகளுக்கு உதவ வேண்டும்.மாற்று திறனாளிகள் பல பேர் வாழ்க்கையில் பல எண்ணற்ற சாதனைகளை படைத்து உள்ளனர்.மாணவர்களாகிய நீங்கள் சிறு வயதிலேயே மாற்று திறனாளிகளை நல்ல எண்ணத்துடன் அணுகி அவர்களுக்கு உதவி செய்து ஊக்கபடுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிநாட்டு நலப்பணி திட்டதினர் செய்து இருந்தனர்.மாணவர்கள் ராஜேஷ்,முனீஸ்வரன்,மாணவிகள் சௌமியா ,ராஜேஸ்வரி,பரமேஸ்வரி உட்பட பலர்இனி வரும் காலங்களில் மாற்று திறனாளிகள் அனைவரையும் ஊக்க படுத்தி உதவி செய்வோம் என பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி