ஐந்து மாவட்டங்களில்இல்லை விளையாட்டு விடுதிகள் வீணாகிறது மாணவர்கள் திறமை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2015

ஐந்து மாவட்டங்களில்இல்லை விளையாட்டு விடுதிகள் வீணாகிறது மாணவர்கள் திறமை

விருதுநகர் உட்பட ஐந்து மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் இல்லாததால், மாணவர்களை வெளி மாவட்டங்களில் தங்கி படிக்க வைக்க பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் மாணவர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகிறது.தமிழகஅரசின் விளையாட்டு துறை சார்பில், நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் ஏழு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.


இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு வழங்கப்படும் பயிற்சியால் விளையாட்டு வீரர்களாகவும் திகழ்கின்றனர். இதில் ஒரு மாணவருக்கு தினமும் உணவுக்காக 250 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது.


பெற்றோர் தயக்கம்: ஆனால் இவ்விளையாட்டு விடுதிகள் தமிழகத்தில் பெரும்பான்மை மாவட்டங்களில் இருந்தாலும் சேலம், கரூர், திருப்பூர், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் இம் மாவட்ட மாணவர்கள் அருகேஉள்ள மாவட்ட விளையாட்டு விடுதிகளில் தங்கிபடிக்கின்றனர். ஆனால் வெளி மாவட்ட விடுதிகளில் மாணவர்களை தங்க வைத்து படிக்க வைக்க பெற்றோர் தயங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்குவிளையாட்டில் ஆர்வம் , திறமை இருந்தும் வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.


விளையாட்டு துறை அதிகாரி கூறுகையில்,“ தற்போது 'டிவி' வருகையால் மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்தாலும், கிராம மாணவர்கள் இன்றும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு தங்கி படிக்கும் வசதியோடு விளையாட்டு பயிற்சியும் கொடுத்தால், விளையாட்டில் சிறந்து விளங்குவதோடு, எதிர் காலத்தில் மேற்படிப்பு,அரசு வேலை போன்றவைகளும் எளிதில் கிடைக்கும். ஆனால் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் அதற்கு பெற்றோர் மறுக்கின்றனர். இதனால் பல மாணவர்களது விளையாட்டு திறமைகள் வீணாகிவருகின்றன” என்றார்.எனவே அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகளை ஏற்படுத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி