பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2015

பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி, மடிக்கணினியின் மூலம் தாங்களே கல்வி கற்கலாம்.கணினியில் கற்பிப்பதை குழந்தை திரும்ப, திரும்ப கேட்கலாம். செவ்வாய்க்கிழமை (டிச.22) முதல் இது எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கும். சமச்சீர் கல்வியில்இடம்பெற்றுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் இந்தச் செயலியில் இடம்பெறும். அதோடு, அறிவுத்திறன் பயிற்சி, ஒழுக்க நெறிகள், குழந்தைப் பாடல்கள் ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன.இந்தச் செயலி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி