சமூகவலைத் தளமான, 'பேஸ்புக்,' சென்னைவாசிகளுக்காக பிரத்யேகவசதியை, நேற்று ஏற்படுத்தியிருந்தது.சென்னையில், இரண்டு நாட்களாக, மொபைல்போன் சேவை செயல் இழந்துள்ள நிலையில், 'பேஸ்புக்,டுவிட்டர்' போன்றவை மட்டும் வெளியுலக தொடர்பு சாதனமாக இருந்து வருகின்றன.
அதை உணர்ந்த, 'பேஸ்புக்' நிர்வாகம், சென்னையை சேர்ந்த தன் பயன்பாட்டாளர்களுக்கு, 'நீங்கள் ஆபத்தில் இருக்கீங்களா அல்லது பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்பதை, 'ஆர் யூ ஓ.கே.,?' எனக் கேட்டு தகவல் அனுப்பியது. அதற்கு, 'ஓ.கே.' என்று, 'கிளிக்' செய்தால், உடனே அவர்களின் பெயரை குறிப்பிட்டு, நட்பு வட்டாரங்களுக்கு, தகவல் அனுப்பியது. அதனால், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், தங்கள் நேசத்துக்கு உரியோர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை அறிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த வசதியை, 'பேஸ்புக்' ஏற்படுத்தி தருவது குறிப்பிடத்தக்கது.
Dec 4, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி